Friday, April 27, 2012

பயங்கரவாதம் முறியடிக்கப் பட்ட பின்னர்: சவால்கள், பொறுப்புக்களை நிறைவேற்ற பொலிஸார் தயாராக இருக்க வேண்டும் - கேட்டாபய ராஜபக்ஷ!

Friday, April, 27, 2012
இலங்கை::பயங்கரவாதம் முறியடிக்கப் பட்ட பின்னர் பொலிஸார் மத்தியில் சவால்களும் பொறுப்புக்களும் அதிக ரித்துள்ள நிலையில் அந்த சவால்களை எதிர்கொள்ளவும், பொறுப்புக்களை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கேட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடும், மக்களும் எதிர்பார்க்கும் சிறந்ததொரு சேவையை அர்ப்பணிப் புடனும் பொறுப்புடனும் வழங்க பொலிஸார் முன்வர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸ் சேவையானது தொழிலுக்காக செய்யும் ஒன்றல்ல, மிகவும் பொறுப்புடன் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த ஒரு சேவையாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கேட்டாபய ராஜபக்ஷ சுட்டிக் காட்டினார்.

மக்களுக்காக சிநேகபூர்வமான, தொழில் ரீதியான, புகழ்வாய்ந்த பொலிஸ் சேவையை உருவாக்கும் நோக்குடன் நாடு பூராகவும் உள்ள பொலிஸாருக்கு விசேட பயிற்சிப் பட்டறையை பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

“சியபத்வில” தாமரைத் தடாகம் என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ள மேற்படி விசேட பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வு கொழும்பு ஆனந்தா கல்லூரி குலரத்ன மண்டபத்தில் நேற்றுக் காலை இடம் பெற்றது. இங்கு ஆரம்ப உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன், சிவில் பாதுகாப்பு படைகளின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஆர். பி. சூரியபெரும, எல்லாவல மேதானந்த தேரர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:- இந்த நாட்டில் மூன்று தசாப்தங்களாக காணப்பட்ட பயங்கரவாதத்தினால் நாடு பெரும் பின்னடைவை கண்டதுடன் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்குதலுக்குள்ளானது. பொருளாதாரம் ஸ்தம்பிதம் அடைந்தது. அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் முப்படையினர் பாரிய சேவைகளை வழங்கினர்.

தற்பொழுது யுத்தம் முடிவுற்று நாட்டில் சமாதானம் நிலவி வருகின்ற நிலையில் பொலிஸாருக்கு மத்தியில் சவால்களும், பொறுப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றன.

யுத்தத்திற்கு பின்னர் பாதுகாப்பு மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட நாடு முழுவதிலும் காணப்பட்ட சோதனைச் சாவடிகள் படிப்படியாக அப்புறப்படுத் தப்பட்டன. அவசர கால நிலைமை நீக்கப்பட்டது. தற்பொழுது முப்படையின ரிடம் இருந்த பொறுப்புக்கள் பொலிஸார் மீது சுமத்தப்பட்டுள்ளன. தற்பொழுது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது. பாதாள உலக கோஷ்டியினரை முறியடித்தல், போதைப் பொருள் கட்டுப்படுத்தல் போன்று விடயங்களிலும் பொலிஸார் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பொலிஸாருக்கு பயிற்சிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள் ளது.

யுத்தம் முடிவுற்றதால் இந்த நாட்டிற்கு வரும் முதலீட்டாளர்களும், சுற்றுலா பயணிகளும் இந்த நாட்டில் சட்டமும், ஒழுங்கும் எவ்வாறு நிலை நாட்டப்படுகிறது. அமைதியான சூழல் காணப்படுகின்றதா என்பதை அவதானித்தே வருவார்கள். அதற்கு பொலிஸார் பொறுப்புடன் நடக்க வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த கெளரவத்தையும், மதிப்பையும் பொலிஸாரும் பெற்றுக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இந்த நாட்டில் இடம் பெற்ற பல்வேறு பாரிய குற்றச் செயல்களை கண்டுபிடித்து அதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இது மிகவும் பாராட்டக்கூடியது.

வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்று வந்த காலத்தில் கொழும்பில் பயங்கரவாதிகளின் வலைப்பின்னலை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

பொலிஸார் எவ்வளவு சிறந்த சேவைகள் செய்தாலும் விமர்ச்சிக்கப்படு கிறார்கள். அந்த விமர்சனங்களுக்கு மத்தியிலேயே சேவையை செய்ய வேண்டியுள்ளது. குற்றவாளிகள் மிகவும் சூட்சுமமாக செயற்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள் வங்கிகளில் கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுவிடுவார்கள். ஆனால் எந்த வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் குற்றவாளிகளை தேடிக் கைது செய்து அவர்கள் தான் குற்றம் செய்தார்கள் என்று நீதிமன்றில் நிரூபிக்கும் பொறுப்பும் பொலிஸாரை சார்ந்தது என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment