Friday, April 27, 2012

ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத் துணைச் செயலாளர், பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பு!

Friday, April, 27, 2012
இலங்கை::ஐக்கிய அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் செயற்பாடுகளின் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் வோல்டர் டீ ஜிவ்ஹன் நேற்று(ஏப்-26) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச் சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் நிகழ்ச்சித் திட்ட ஆய்வாளர் ஆன் நெல்சன், ஐக்கிய அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான துணைத் திட்டமிடல் முகாமையாளர் கேட் மெக்பலன்டும் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment