Friday, April, 27, 2012இலங்கை::பிரிவினைவாத தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து மே தினக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், பிரிவினைவாத புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக எனது தந்தை போராடினார்.
போராட்டம் நடத்திய எனது தந்தை நடு வீதியில் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
தந்தையான ரணசிங்க பிரேமதாசவின் நினைவு நிகழ்வுகளை நடாத்த எவரிடமும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை.
தந்தையை படுகொலை செய்த புலி பிரிவினைவாத தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
எனவே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை, மாறாக தேசப்பற்றாளர்களை இணைத்துக் கொண்டு கொழும்பில் ரணசிங்க பிரேமதாச நினைவு நிகழ்வுகள் நடத்தப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சஜித் பிரேமதாச நாட்டையும் நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்தி வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஸ
மே தினக் கூட்டங்களில் பங்கேற்க முடியாமை தொடர்பில் சஜித் எழுத்து மூலம் கட்சித் தலைமைக்கு அறிவித்து அனுமதி கோரியிருந்தார்.
சஜித்தின் கோரிக்கை நியாயமானது என்ற காரணத்தினால் மே தினக் கூட்டத்தில் பங்கேற்காது நினைவு நிகழ்வுகளை நடாத்த அனுமதியளிக்கப்பட்டது.
இதற்கு முன்னரும் கொழும்பு தவிர்ந்த பிரதேசங்களில் மே தினக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பண்டரவளையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் நடத்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment