Friday, April 27, 2012

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுக்க எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது!

Friday, April, 27, 2012
இலங்கை::பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்க தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் எதிர்வரும் ன்றாம் திகதி நடைடபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்க தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இவ்வாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கப்படும்.

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தகவல் வெளியிடுகையில், இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை பாராளுமன்ற தெவுக்குழுவிலேயே காண முடியும் என்பதே யதார்த்தமாகும். அதனால் தான் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளடன் ஆளும் தரப்பினன் பிரதிநிதிகளின் பெயர்களையும் வழங்கியுள்ளது.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இதுவரை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமது பிரதிநிதிகளை பெயரிடாமல் உள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தமது கட்சிகளின் பிரதிநிதிகளின் பெயர்களை தெரிவுக்குழுவுக்கு வழங்கும் என்று நாங் கள் இதுவரை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இதுவரை பெயர்கள் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் அடுத்த பாராளுமன்ற அமர்வுகள் மே மாதம் நடைபெறவுள்ளன. அந்த வகையில் அதற்கான கட்சித் தலைவர் கள் கூட்டம் 3 ஆம் திகதி நடைபெறும். இந்தக் கூட்டத்தின்போது பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அரõங்க தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவில் பங்கெடுக்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் இன்னும் இழக்கவில்லை. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் பங்கெடுக் கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய எம்.பி. க்கள் குழுவினரும் தேசிய பிரச் சினைக்கு அனைத்துக் கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்öபற்று கலந்துரையாடி இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி. க்கள் இதனை பல முறை வலியுறுத்தினர். எனவே இனியாவது எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment