Friday, April 27, 2012

ஜனாதிபதிக்கும் பிள்ளையானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

Friday, April, 27, 2012
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

கிழக்கு மாகாணசபையை கலைப்பது தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மாகாணசபையின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாக மாகாணசபையை கலைக்க வேண்டுமாயின் அதற்கு முதலமைச்சரின் இணக்கம் அவசியமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணசபை கலைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் நோக்கில் முதலமைச்சர் பிள்ளையானுடன், ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கிழக்கு மாகாணசபைக்கு மேலதிகமாக மேலும் இரண்டு மாகாணசபைகளும் கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment