Friday, April, 27, 2012இலங்கை::புலிகளை அழித்ததை காரணமாக கொண்டு, இராணுவத்தில் உள்ள எந்த ஒரு சிப்பாய்க்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், இந்த சிப்பாய்க்காக இலவசமாக வாதாடி, அவர்களை காப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அல்லி மலர் அமைப்பின் ஏற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான எஸ்.எல்.குணசேகர தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் எப்படியாவது சட்டத்தையும் அதிகாரத்தை செயற்படுத்தி புலிகளை அழித்த இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கவே முயற்சித்து வருகிறது. இதனால் வெள்ளைகார்களை மகிழ்விக்க இராணுவத்தினர் பலியிடபடுவார்களோ என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் குணசேகர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அன்று இராணுவத்தினர் ஏனைய அனைத்து மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக செய்த சேவையை மறந்து போவது மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கை அதனை ஒழுக்கம் நிறைந்த சமூகம் செய்யக் கூடாது. சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அஞ்சியுள்ளதை காணமுடிகிறது. அந்த அழுத்தங்களுக்கு பயந்துள்ள அரசாங்கம் எதனையும் செய்ய தயாராக உள்ளது.
அரசாங்கத்தில் உள்ள பலர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு பற்றி பல்வேறு நிலைப்பாடுகளை வெளியிட்டு வருவதுடன் அரசாங்கத்தின் ஒரு தரப்பு போருக்கு பின்னர் மீண்டும் தலைநிமிர்ந்துள்ள தேசத்தை காட்டிக்கொடுக்க தயாராகி வருகின்றனர்.
இராணுவம் போரை வெற்றிக்கொண்ட எப்போதும் மறக்கக் கூடாது. இந்திய தற்போது, இலங்கைக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளிலும் இருப்பது உறுதியாகியுள்ளது எனவும் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment