Wednesday, April 25, 2012

வெலிக்கடை சிறைக்குள் தாக்கப்பட்டதாக இளைஞர் முறைப்பாடு!

Wednesday,April,25,2012
இலங்கை::வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிறை உத்தியோகத்தர் ஒருவரால் தாம் தாக்கப்பட்டதாக பொரளை பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நபருக்கு நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் பிணை வழங்கப்பட்ட பின்னர், அவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட இளைஞர் மீது பொலிஸ் நிலையத்தில் போலியாக முறைப்பாடு செய்து அவரைக் கைது செய்த பின்னர், சிறைச்சாலைக்குள் சிறை உத்தியோகத்தரால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment