Wednesday,April,25,2012இலங்கை::பம்பலப்பிட்டி பிரதேச ஹோட்டல் ஒன்றிலிருந்து போலி ஆயுர்வேத வைத்தியராக செயற்பட்ட இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் இந்த இந்திய நாட்டவரிடமிருந்து ஒரு தொகை ஆயுர்வேத மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெள்ளவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment