Wednesday,April,25,2012சென்னை::ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து, இந்தியா இன்னும் தீர்மானிக்கவில்லை.
இந்தியாவின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
எவ்வாறாயினும், இலங்கை தமது முன்னெடுப்புகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு, எந்த அழுத்தங்களும் இன்றி மேலதிக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருப்பதாக, இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment