Wednesday, April 25, 2012

சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அந்தோணி எச்சரிக்கை!

Wednesday,April,25,2012
புதுடெல்லி::நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முப்படைத் தளபதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி எச்சரித்துள்ளார்.

டெல்லியில் வைத்து முப்படைத் தளபதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

நாட்டின் பாதுகாப்புக்கு அனைத்து திசைகளில் இருந்தும் அச்சுறுத்தல் உள்ளது. உள்நாட்டில் உள்ள தீவிரவாதிகளும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவை தாக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் நிலவி வரும் நிலை குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அங்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அது இந்தியாவையும் பாதிக்கும். மேலும் இந்தியா மற்றும் ஜப்பான் மீது சீனா கொண்டுள்ள வெறுப்பும் நாட்டுக்கு நல்லதல்ல. அனைத்து துறைகளிலும் இந்தியா மற்றும் ஜப்பானுடன் போட்டிபோட்டு வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் போட்டி மனப்பான்மை மற்றும் வெறுப்பு ஆசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இவை அனைத்தும் முப்படைகளுக்கும் சவாலாக இருக்கும்.

இது தவிர சைபர் குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன் தொழில்நுட்பத்தின் மூலம் நாம் பரிமாறிக்கொள்ளும் முக்கிய ரகசிய தகவல்கள் தேசவிரோதிகளின் கையில் கிடைத்தால் அதனால் மோசமான விளைவுகள் ஏற்படும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் பாதுகாப்பு சூழல் ஓரளவுக்கு மேம்பட்டுள்ளது. ஆனால் வரும் கோடை காலத்தில் தான் பாதுகாப்பு படையினர் மிகுந்த கவனமாக செயல்பட வேண்டி இருக்கும். ஏனென்றால் ஜம்மு காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு இந்த கோடைகாலம் ஒரு சவாலாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment