Sunday, April 15, 2012இஸ்லாமாபாத்::இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சல்மான் பஷீர் (60) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மொவாசம் அகமது கான் நேற்று தெரிவித்தார். கடந்த 2008 மார்ச் மாதம் முதல் கடந்த மார்ச் வரை பாகிஸ்தான் வெளியுறவு செயலாளராக இருந்தவர் சல்மான். 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் இவர் பங்கேற்றுள்ளார். இப்போது, இந்தியாவுக்கான பாகிஸ்தானின் தூதராக சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment