Sunday, April 15, 2012இலங்கை::நீர்கொழும்பு - திஸாஹேவத்த - கமே கடே வீதியில் வைத்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ததாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நேற்று இரவு 10.50 அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கட்டான, சீனக்குடா மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 38 வர்க்க ரிவால்வர் இரண்டு, அதற்கான 12 ரவைகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று, 104950 ரூபா பணம், இரு ஜோடி வாகன இலக்க தகடுகள், மற்றும் ஆண் உடைகள் என்பவற்றை நீர்கொழும்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment