
இலங்கை::அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில், எதிர்கட்சிகளும் பங்கேற்கக் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றக் குழுவை சந்தித்து பேசுவதற்கு முன்னர், அவர் பாரஜீய ஜனதா கட்சியின் தலைவர் சுஸ்மா சுவராஜுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
இதன் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்த அனைத்து கட்சிகளுனதும் ஒத்துழைப்பு அவசியமாகிறது.
அத்துடன் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவுவில் எதிர்கட்சிகளும் இணையும் வகையிலான சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் அனைத்து தரப்பினரதும் கருத்துக்களையும் பரிமாற்றிக் கொள்ள முடியும்.
அரசியல் தீர்வினை காண்பதற்கு நீண்டகாலம் இல்லை எனவும், உடனடிhயக இதற்கு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுடில்கிக்காக அண்மையில் நடைபெற்ற மாநகர சபை தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு, அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இதேவேளை, இலங்கையில் அரசியல் தீர்வினை ஏற்படுத்திக் கொள்வதற்கு, அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என, சுஸ்மா சுவராஜ் கோரியுள்ளார்.
அவ்வாறு செயற்படும் பொருட்டு, வெளிநாட்டு அழுத்தங்களை தவிர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment