
வாஷிங்டன்::அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 6-ந் தேதி நடக்கிறது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஒபாமா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி சார்பில் குடியரசு கட்சி வேட்பாளராக மிட் ரோமினி களம் இறக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த தேர்வு போட்டியில் கட்சி நிர்வாகிகளால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், சி.பி.எஸ். நியூஸ் ஆகியவை தங்களது வாசகர் இடையே தேர்தல் குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. அதில் ஒபாமாவுக்கும், மிட்ரோம்னிக்கும் இடையே கடும் போட்டி இருப்பது தெரிய வந்தது.
அதில் ஒபாமாவுக்கு 47 சதவீதமும், ரோம்னிக்கு 44 சதவீதமும் ஆதரவு இருந்தது. இது கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பு ஆகும். மிட் ரோம்னியை குடியரசு கட்சி வேட்பாளராக தேர்வு செய்தது சரி என அக்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர் தேர்வின்போது இறுதியாக போட்டியிட்ட சாண்ட்ரோம் விலகியது சரியான முடிவு என்றும் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment