Monday, April 16, 2012

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை - மூவர் கைது!

Monday, April 16, 2012
இலங்கை::அநுராதபுரம் கெக்கிராவ எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வருகை தந்த வேன் மாத்தளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் கடந்த 11 ஆம் திகதி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நுழைந்து அங்கிருந்த ஒரு இலட்சத்து அறுபத்து நான்காயிரம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment