Monday, April 16, 2012இலங்கை::யாழ்ப்பாணம் கிளாலிப்பகுதியில் பற்றைக்காணியைத் துப்பரவு செய்யும் போது பற்றைக்குள்; போர்க்காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த மிதிவெடி வெடித்ததில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று திங்கள் மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். கொழும்புத்துறை உதயபுரம் பகுதியைச் சேர்ந்த சிறிதரன் பேணாட் (வயது 20) என்ற இளைஞனும் அவரது நண்பரான எஸ்.ரமணன் (வயது 18) என்பவரும் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த மிதிவெடி வெடிப்புச் சம்பவத்தில் சிறிதரன் பேணாட் என்ற இளைஞன் தனது ஒற்றைக் காலை இழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment