Monday, April 16, 2012இலங்கை::புங்குடுதீவு கரையோர பகுதியில் சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு இந்தியப் பிரஜைகளும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமது அடையாளத்தினை உறுதிப்படுத்தியதன் பின்னர் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மூன்று இந்தியப் பிரஜைகள் கடந்த 12 ஆம் திகதி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, ஊர்வாகவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்களில் ஒருவரிடம் கடவுச்சீட்டு இருந்தமையால் அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment