Saturday, April 21, 2012

இந்திய நாடாளுமன்ற குழு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல்!

Saturday, April, 21, 2012
இலங்கை::இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, இலங்கையின் தேசிய பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் இந்திய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதனிடையே, குறித்த கலந்துரையாடல் தொடர்பிலான செய்தியாளர் மாநாடொன்றும், இன்று கொழும்பில் நடத்தப்படவுள்ளது..

அதேவேளை, இந்திய குழுவினர் நேற்று பிற்பகல் மட்டக்களப்பிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய தொழில் கல்லூரியினை தேசிய தொழில் கல்லூரியாக தரமுயர்த்தும் நிகழ்வு நேற்று வந்தாறுமூலையில் இடம்பெற்றது..

இந்த நிகழ்வில் தேசிய தொழில் கல்லூரிக்கான நினைவுப்படிகத்தை சுஸ்மா ஸ்வராஜ் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக். கே.காந்தா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதியமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா ஸ்வராஜ், இந்தியா இலங்கையின் பாரம்பரிய மிக்க நட்பு நாடு என்ற வகையில் பலவித ஒத்துழைப்புகளை வழங்கிவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நட்புறவு தொடர்ந்தும் நிலைக்கும் என்றும், இந்தியா உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து அரசாங்கங்களும் இளைஞர்களுக்கு உரிய காலத்தில் தொழிலை வழங்குவதற்கு முயற்சிக்கின்றன.

இருந்தபோதும் பல்வேறு சவால்களின் காரணமாக அந்த முயற்சி ஈடேராமல் போய்விடுகின்றது.

எல்லோருக்கும் அரசாங்கமே வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும் என்பது தவறான அபிப்பிராயமாகும்.

அவ்வாறு நோக்கும் போது தொழிற் பயிற்சி வழங்கும் மையங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குகின்றன.

இந்தியாவை பொறுத்தவரையில் பல்வேறு தொழில்சார் பயிற்சிகளில் தேர்ச்சிபெற்றுள்ள நிலையில், அதன் மூலம் கிடைத்த நிபுணத்துவத்தையே இந்தியா இன்று இலங்கைக்கு வழங்கியுள்ளதாக என்று அவர் குறிப்பிட்டார்..

No comments:

Post a Comment