Saturday, April, 21, 2012திருவாரூர்::இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு திருவாரூர் கீழவீதியில் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசியது: இலங்கை சென்ற இந்திய எம்பி குழுவால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய தமிழக கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் கூட அந்த குழுவில் இடம்பெறவில்லை. மத்திய ஆட்சியில் கூட்டணி அங்கம் வகித்த திமுகவும் வெவ்வேறு முடிவுகளை எடுக்கும் கட்சியாக உள்ளது. காங்கிரசின் தமிழர் விரோத கொள்கையால்தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
மத்திய அரசு பின்பற்றும் மக்கள் விரோத கொள்கையால் விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்படும் வகையில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் விரும்பும்போதெல்லாம் விலையேற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 100 நாள் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.40ஆயிரம் கோடியிலிருந்து ரூ.33ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதற்கான அருகதையை இழந்து வருகிறது. மாற்று அரசியல் பாதை உருவாக்கிட காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை அமைத்திடவேண்டும். இடதுசாரி கட்சிகள் வலுப்பெறாமல் இந்தியாவுக்கு மாற்று இல்லை.
இவ்வாறு டி.ராஜா பேசினார்.
No comments:
Post a Comment