Monday, April 2, 2012

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு விஜயம்!

Monday, April 02, 2012
இலங்கை::இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இந்திய அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பங்கேற்று விசேட உரையாற்றவுள்ளார்.

இந்த மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்கிறார்.

அதில் அவர் உரையாற்றுவதற்காக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செல்லும் இவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment