Monday, April 02, 2012இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு தயாராகவிருந்த ஆறு பேரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொட்டாஞ்சேனையில் உள்ள விடுதியொன்றுக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோதமாக நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்காக குறித்த சந்தேநகபரிடம் ஏனைய ஐவரும் பணம் கொடுத்துள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
படகுகள் மூலம் இவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல திட்டமிட்டிந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொட்டாஞ்சேனை, கிளிநொச்சி, திருகோணமலை, ஊர்காவற்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment