Sunday, April 1, 2012

வவுனியாவில் கடும் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள்!

Sunday, April 01, 2012
இலங்கை::வவுனியா - மெனிக்பாம் நலன்புரி நிலையத்தை அண்மித்து ஊடறுத்து வீசிய கடும் காற்று காரணமாக 1,172 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடும் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment