
இலங்கை::இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரசன்னத்துக்கு எதிராக, ஐயாயிரம் மீனவர்களை கொண்டு, போராட்டம் நடத்தவிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் இருந்து சுமார் ஐந்தாயிரம் மீனவர்களை ராமேஸ்வரம் கடற்பகுதிக்கு அழைத்து சென்று, அங்கு இந்த போராட்டத்தை நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்சியான இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரசன்னத்தின் விளைவாக, வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு ஒரு முடிவினை காணும் பொருட்டு, இந்த போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவை மேற்கோள் காட்டி, ஏசியன் ட்ரிபுயின் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment