


இலங்கை::உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ்க்கு இன்று வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருந்துபசாரமளித்தார். ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த விருந்துபசார நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்..
ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் இன்று மாலை சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே நேற்றைய தினம் இந்த குழு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசி இருந்தது.
இதன் போது நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஊடாக அரசியல் தீர்வினை காண்பது தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment