Wednesday,April,18, 2012புதுடில்லி::எல்லைப்பகுதியில் சீனா மற்றும் பாகிஸ்தானால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்களை வேகமாக கொள்முதல் செய்யவும், எல்லைப்பகுதியில் இந்திய படைகள் மற்றும் ஆயுதங்கள் வேகமாக சென்று வர உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
மேற்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் எல்லைப்பகுதியில் 14 ரயில்வே திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய திட்டக்குழுவிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
26,155 கோடி ரூபாய் மதிப்பில் வடக்கு எல்லைப்பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து இந்திய ராணுவம் சமர்ப்பித்தள்ள விரிவான திட்ட மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்கு மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமையில் அதிகாரம் பெற்ற குழு ஒன்றை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் 2020-2021ம் ஆண்டில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு எல்லைப்பகுதியில் 9,243 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் 2016-1017ம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.
சிறப்பு ராணுவபடையினருக்கு பாய்ந்து தாக்க உதவும் துப்பாக்கிகள், சிறு துப்பாக்கிகள், வாகனங்கள், லேசர் கருவிகள், நீரில் செல்லும் வாகனங்கள், பாராசூட்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் வாங்குவது குறித்து துணை ராணுவ தளபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ள ராணுவத்துக்கு என போர் காலங்களில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் மற்றும் சண்டையின் போது தேவைப்படும் விமான உதிரிபாகங்கள் போன்றவை வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்ய குழு அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்வது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, ராணுவ தளபதி விகே சிங் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் மூன்றாவதாக நடந்த ஆலோசனை கூட்டமாகும். இந்த கூட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து 647 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வாங்க உள்ள 144 எம்-177 ரக பீரங்கிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
சீனா எல்லைப்பகுதியில் கடந்த 30 நாட்களில் சுமார் 15 ஆயிரம் ராணுவ வீரர்களை கொண்டு வந்துள்ளது. சுமார் 4,057 கி.மீ., தூரமுள்ள எல்லைப்பகுதியில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியுள்ளது. குயிங்காய்-திபெத் பகுதியில் சீனா விமானப்படை மற்றும் ராணுவமும் மிகப்பெரிய அளவில் பயற்சியை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து மத்தய அரசு மேற்கண்ட நடவடிக்கைகளில் விரைவுபடுத்தியுள்ளது.
ராணுவம் கோரியுள்ள ரயில்வே திட்டங்கள்: முர்கோங்செல்ட்-பசிகாட்-ருபய், மிசாமரி-டவாங், வடக்கு லக்மிபூர்- அலாங்-சிலாபதார்,பட்டி-பெராஸ்பூர். ஜோத்பூர்-ஷெர்கார்க்-பால்சந்த், ஜோத்பூர்-ஜெய்சல்மெர்,ரிஷிகேஷ்- கரன்பிரயாக்- சமோலி, டேராடூன்-உத்தர்காசி, டனாக்பூர்-ஜாவ்லிஜ்பி, டனாக்பூர்-பகேஸ்வர், அனுப்கார்க்-சத்தீஸ்கர்க்-மோதிகார்க் ஆகிய ரயில் திட்டங்களுக்கு மத்திய திட்டகமிஷனிடம் விரைவில் அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ., அதிரடி: இதனிடையே ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதலில் நடந்த தொடர்பாக டில்லி மற்றும் நொய்டாவில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை 2 முன்னாள் ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
No comments:
Post a Comment