Wednesday, April 18, 2012

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு விஜயம்!

Wednesday,April,18, 2012
இலங்கை::உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக்குழு இன்று புதன்கிழமை காலை வவுனியா, செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்வாறு செட்டிக்குளம் முகாமுக்கு வருகை தந்த அவர்கள், அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடுவதை படங்களில் காணலாம்.

இலங்கை வந்துள்ள இந்திய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்தக் குழுவினர் மெனிக்பாம் - கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் இருக்கும் மக்களை நேரில் சந்தித்து அவர்களது தேவைகள் குறித்து கண்டறிந்ததாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது, வவுனியா மாவட்ட செயலாளர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ், மீள்குடியேற்ற அமைச்சர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்து வெளியிட்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் குறிப்பிட்டனர்.

அத்துடன் அந்த மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை தாம் எடுப்பதாகவும் இந்திய நாடாளுமன்ற குழுவினர் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment