Wednesday,April,18, 2012இலங்கை::நீர்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது மேலும் 28 கையடக்கத் தொலைபேசிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு பட்ட நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை பாதுகாப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இக் கைத்தொலைபேசிகளைக் கைப்பற்ற முடிந்ததாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளில் சிறைச்சாலை அதிகாரிகளுக்குச் சொந்தமான பல தொலைபேசிகள் இருந்ததாகவும் இது எவ்வாறு இவர்களுக்குக் கிடைத்தது என்பது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவ்அதிகாரி ஏற்கனவே சுமார் மூன்று வாரத்திற்கு முன்னராக இது போன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது 46 கைத்தொலைபேசிகளை கைப்பற்ற முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment