Monday, April 23, 2012

புதிய ராணுவ தளபதி நியமன விவகாரம் : கோப்புகளை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Monday, April, 23, 2012
புதுடெல்லி::புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விக்ரம் சிங் நியமிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், விக்ரம் சிங் நியமனம் தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக்காலம் வரும் மே 31ம் தேதி முடிவடைகிறது. புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விக்ரம் சிங்கை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இதை எதிர்த்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் சங்கம், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி கபாடியா அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்து விக்ரம்சிங் நியமனம் தொடர்பான கோப்புகளை உடனடியாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. விக்ரம் சிங் மீதான குற்றச்சாட்டுகள், தளபதி நியமனம் தொடர்பான கேபினட் கமிட்டி முன் வைக்கப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ராணுவ தளபதி வி.கே.சிங்கின் வயது சர்ச்சையை மீண்டும் கிளப்பும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. அதே நேரம் வயது பிரச்னை முடிந்து போன விஷயம். அதனை மீண்டும் விசாரிக்க மாட்டோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment