Monday, April 23, 2012

தேசிய வைத்தியசாலையில் நோயாளியொருவர் தற்கொலை!

Monday, April, 23, 2012
இலங்கை::கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நோயாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

72 ஆம் இலக்க நோயாளர் விடுதியின் கழிவறையொன்றுக்குள் குறித்தநபர் இன்று அதிகாலை 1.45 அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

படுக்கை விரிப்பை பயன்படுத்தி அவர் தூக்கிட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ஆரியவங்ச கூறியுள்ளார்.

தேங்காய் ஒன்றை தமது தலையில் அடித்து உடைப்பதற்கு முற்பட்டதால் ஏற்பட்ட காயங்களுடன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்தநபர், ஸ்கேன் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நோயாளர், திவுலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment