Friday, April, 27, 2012இலங்கை::அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தர் சிலைகளும் உடைத்து அகற்றப்பட வேண்டும் எனவும் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் எந்த அடிப்படைவாத கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை எனவும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.
நான் எந்த சந்தர்ப்பத்திலும் அடிப்படைவாத கருத்துக்களை வெளியிட்டதில்லை. எனினும் சட்டவிரோதமான அனுமதியற்ற சமய வழிப்பாட்டு தளங்களை அகற்ற வேண்டுமாயின் அனைத்து சட்டவிரோத மத வழிப்பாட்டு தளங்களையும் அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன்.
நான் இவ்வாறு தெரிவித்த கருத்துக்களை பௌத்த அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் திரிபுபடுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். இவற்றை தடுக்க என்னால் முடியாது. எனினும் அரசாங்கம் இவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டும்.
இந்த நாட்டில் உள்ளவர்கள் சிலருக்கு இன, மத பேதங்களை ஏற்படுத்தி அவற்றில் பிரயோசமடையும் தேவையுள்ளது எனவும் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment