Friday, April 27, 2012

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 ரவுடிகள் காயம்!

Friday, April, 27, 2012
சென்னை::மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒரு குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட போது பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் இருவர் காயமுற்றனர். இரண்டு பேரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்திருக்கிறது. இது தொடர்பான விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

சென்னை நியூ ஆவடி சாலையில் ஒரு வீட்டு வசதி குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு மாடியில் 2 பேர் தங்கி இருந்தனர். நள்ளிரவில் வருவதும், போவதுமாக இருந்தனர். இவர்கள் என்ன பணி செய்கின்றனர் என்று கூட அக்கம் பக்கத்தில் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலையில் வெடிகுண்டு காயத்துடன் 2 பேர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஒருவர் சத்யா ( கார் டிரைவர் ) என்றும், மற்றொருவர் சுகந்தன் ( பணி எதுவும் இல்லை ) என்றும் தங்களுடைய பெயர்களை ஆஸ்பத்திரியில் பதிவு செய்தனர். சுகந்தனுக்கு இரண்டு கைகளும் முழுமையாக சிதைந்து போய் இருந்தது. மற்றொருவர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று சென்று விட்டார்.

இருவரும் சென்னையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தனரா அல்லது தூத்துக்குடியில் இருந்து தயார் செய்து கொண்டு வந்திருந்தனரா என்றும், இந்த ரவுடிகள் யாரை கொலை செய்ய சென்னையில் முகாமிட்டிருந்தனர் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கீழ்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் பவானிஈஸ்வரி குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் டி.வி.,பார்த்து கொண்டிருந்த போது வெடித்து விட்டது என்று முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment