Friday, April, 27, 2012இலங்கை::சிரேஜஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 23 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சேவைக்கான தேவையை கருத்திற் கொண்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.டீ.டூல் பொலிஸ் தலைமையகத்திலிருந்து பொலிஸ் மருத்துவ சேவை பணிப்பாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் மருத்துவ சேவை பணிப்பாளர் பதவியில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம்.பிரான்ஸிஸ் ஒழுக்காற்று மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பிரிவின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சி.கே.நாணயக்கார நியமிக்கபட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி.ஜி.டி.குணவர்தன காலி பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ்.வல்கம பொலிஸ் மாஅதிபரின் கட்டளை பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.ஜே.கே.எஸ்.டபிள்யூ.விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தவிர பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment