Friday, April, 27, 2012இலங்கை::இலங்கையும் இந்தியாவும் உறுதியான ஒரு பொருளாதார அபிவிருத்தி இலக்கை எட்டியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நடைபெறும் 2012 ஆம் ஆண்டின் இந்திய நிர்மாணத்துறைசார் கண்காட்சியை நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சிறந்த உறவு நிலவி வருவதாகவும் அந்த உறவை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அசோக் கே காந்தா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், ஐந்து பில்லியன் வரை அதிகரித்து 65 வீதமாக உயர்வடைந்துள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ எதிர்காலத்தில் இலங்கை நிர்மாணத்துறையில் பல முன்னேற்றங்கள் காண வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கையில் நிர்மாணத்துறை, சுற்றுலாத்துறை, திறன் அபிவிருத்தி, தொழில்பயிற்சி ஆகிய துறைகளில் பல்வேறு சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment