Friday, April 27, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணிக்காக 32 அமைச்சர்கள் உள்பட 43 பேர் கொண்ட குழு : ஜெ. அறிவிப்பு!

Friday, April, 27, 2012
சென்னை::புதுக்கோட்டை இடைத்தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக 43 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இதில் 32 அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கை:புதுக்கோட்டை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 12,ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், வளர்மதி, பழனியப்பன், சி.வி.சண்முகம், தாமோதரன், செல்லூர் ராஜூ, பச்சைமால், எடப்பாடி பழனிச்சாமி, காமராஜ், மூர்த்தி, ராமலிங்கம், சின்னையா, ரமணா உள்ளிட்ட 32 அமைச்சர்களும் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட 11 பேரும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment