Friday, April 27, 2012

கோடை விடுமுறையை முன்னிட்டு விஜிபியில் வெளிநாட்டு சாகச நிகழ்ச்சி : 45 நாட்கள் நடைபெறுகிறது!

Friday, April, 27, 2012
சென்னை::சென்னைக்கு மிக அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள விஜிபி யூனிவர்சல் கிங்டம் பொழுதுப்போக்கு பூங்கா மிகவும் பிரபலமானது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநில சுற்றுலா பயணிகளும் கோடை விடுமுறை காலத்தில் இங்கு பெருமளவில் குவிகின்றனர். இங்கு ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையில் சர்வதேச புகழ்பெற்ற கலைஞர்களை வரவழைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. இந்த வருடம் அமெரிக்க நாட்டு சாகச கலைஞர்கள் 5 பேர் ‘ஆக்ஷன் ரேஞ்சர்ஸ் என்ற பெயரில் பல்வேறு சாகசங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

மெல்லிய கம்பத்தில் பேலன்ஸ் செய்து சுழன்று ஆடும் சாகசம், ஒருவரை நிற்க வைத்து மற்றொருவர் அவர் தலையில் ஒற்றை கையில் பேலன்ஸ் செய்து நிற்கும் காட்சி, கம்பி வளையத்தை சுழற்றி செய்யும் வித்தைகள் போன்றவை பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. கலைநயத்துடன் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடை இதன் சிறப்பம்சம். பார்வையாளர்கள் 1550 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, அமெரிக்க மிராஜ் என்டர்டெய்ன்மென்ட் தலைவர் டேவிட் டிரேவ்ஸ் தலைமையில் நடைபெற்றது. விஜிபி நிறுவன தலைவர் வி.ஜி.சந்தோஷம், துணை தலைவர் வி.ஜி.செல்வராஜ், நிர்வாக இயக்குனர் வி.ஜி.பி.ராஜாதாஸ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிகள் ஜூன் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment