Friday, April 27, 2012

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்ததாகக் கூறப்படும் இலங்கை மீனவர்கள் 16 பேர் கைது!

Friday, April, 27, 2012
இலங்கை::இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்ததாகக் கூறப்படும் இலங்கை மீனவர்கள் 16 பேர் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் 25 ஆம் திகதிகளில் குறித்த மீனவர்களை ஏற்றிய மூன்று படகுகளையும் இந்திய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் தற்போது சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடற்தொழில் அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த மீனவர்களையும் படகுகளையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக கடற்தொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இதனிடையே வெளிநாட்டு கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களிடம் கடற்தொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment