Saturday, April 28, 2012

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் தொடர்பில் செயற்திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது!

Saturday, April, 28, 2012
இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரை அமுலாக்கம் தொடர்பில் செயற்திட்டமொன்றை, இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் மாதம் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தத்திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

செயற்திட்டத்தை தயாரிக்கும் நோக்கில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளிடம் அரசாங்கம் கருத்து கோரியுள்ளது.

ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகள் தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாட்டை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் எவ்வித எதிர்ப்பும் கிடையாது என கம்யூனிஸ்ட் கட்சியின் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு பரிந்துரைகளை இடதுசாரி கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

ஆணைக்குழு பரிந்துரைகள் பற்றிய தமது நிலைப்பாடு அடுத்த வாரத்தில் முன்வைக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment