Monday, April 16, 2012

இந்திய அணுமின் உற்பத்தி நிலையத்தால் இலங்கைக்கும் பாதிப்பு!

Monday, April 16, 2012
இலங்கை::இந்திய அணுமின் உற்பத்தி நிலையம் காரணமாக இலங்கைக்கு தாக்கம் ஏற்படக்கூடிய வாயப்புள்ளதாக சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் சாசனத்திற்கு அமைவாக அதுகுறித்து இலங்கையில் இராஜதந்திர ரீதியிலான அழுத்தம் விடுக்க முடியுமென சூழலியலாளர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் முன்கூட்டியே கதிரியக்க தாக்கத்தை அடடையாளம் காண்பதற்கான முன்னெச்சரிக்கை கட்டமைப்பை நிருவுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அணுசக்தி அதிகாரசபையின் தலைவர் கலாநிதி ரஞ்ஜித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment