Monday, April 16, 2012இலங்கை::யாழ். தொண்டமனாற்றில் புதுவருடப்பிறப்பிற்காக கோயிலுக்கு சென்ற தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13ம் திகதி புது வருட தினத்தன்று மாலை 6 மணி முதல் இவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் அவரது தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
கெருடாவில் தொண்டமனாற்றைச் சேர்ந்த சிவலிங்கம் சிவகுமார் வயது 18 என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
மகன் சம்பவ தினத்தன்று தனது உறவினர் ஒருவருடைய வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றதாகவும் அதன்பின்னர் இன்று வரையில் வீடு திரும்பவில்லையென்றும் தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment