Monday, April, 09, 2012புதுடெல்லி::எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம்.
புதுடெல்லியில் நடைபெறவுள்ள அரசியல் மாநாடு ஒன்றில் கலந்துக்கொள்ள இவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி பணியாற்றி வரும் அமைப்பு ஒன்றினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில்,ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் கலந்துக்கொள்ள உள்ளார்.
புதுடெல்லியில் நடைபெறறும் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ளும் ரணில் விக்ரமசிங்க, இநதிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைபேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட யோசனைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பின்னர், முதல் முறையாக இலங்கையில் அரசியல்வாதிகள் இருவர் இங்கு விஜயம் செய்வது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment