Monday, April, 09, 2012இலங்கை::இலங்கையில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மிகவும் குறைவாகக் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் அறிவித்துள்ளது.
இன்னமும் இலங்கையில் பெண்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மிகவும் குறைந்தளவில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களின் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதேசத்தில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பாராளுமன்றில் 5.6 வீதமான பெண்களே பிரதிநிதித்துவம் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் ஆசியாவில் மிகவும் குறைந்தளவு பெண் அரசியல் பிரதிநிதித்துவம் உடைய நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment