Sunday, April 15, 2012இலங்கை::மாத்தறை - நில்வலா ஆற்றின் மாலிம்பட பிரதேசத்தில் பல உயிர்களை காவுகொண்ட முதலையொன்று பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலையொன்றினால் பாடசாலை மாணவி ஒருவரின் உயிர் காவுகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன,
இதற்கமைய, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கை கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவியின் உயிரை காவுகொண்ட முதலையா பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உறுதியாக கூறமுடியாதென சுகாதார பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
மாத்தறை நில்வளா கங்கையிலுள்ள முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment