Monday, April 16, 2012

காணாமல் போயிருந்த முன்னாள் புலி போராளி மீட்பு!

Monday, April 16, 2012
இலங்கை::கடந்த 5 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தாக கூறப்படும் புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கி விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி போராளி ஒருவர் திருகோணமலை - அனுராதபுரம் சந்தியில் கைவிடப்பட்டு சென்றிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக முதலிக்குளம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலிக்குளம் டி .5 நாமால்வத்தை பிரதேசத்தில் வசித்து வரும் ராசா சுதர்ஷன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போன நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவர் சில காலம் லிகளின் கடற்படைப் பிரிவில் இரண்டாம் லெப்டினட் தரத்தில் பணியாற்றியுள்ளதுடன் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் முகாம் ஒன்றில் புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் ,புனர்வாழ்வு பெற்று விடுதலையானவர்கள் இரண்டு லட்சம் ரூபாவை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி, ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்து தன்னை அழைத்துச் சென்றதாக சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அழைத்துச் செல்லும் வழியில், தன்னை வான் ஒன்றில் ஏற்றிய இந்த நபர்கள், குச்சவெளி பிரதேசத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் ஒருவர் குறித்து தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் சுதர்ஷன் காவற்துறையினரிடம் கூறியுள்ளார். அழைத்துச் சென்ற நபர்கள் தன்னை நன்கு கவனித்து கொண்டதுடன், விசாரணைகளின் பின்னர் கண்களை கட்டி, அழைத்து வந்து, அனுராதபுரம் சந்தியில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த சம்பவம் குறித்து முதலிக்குளம் காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment