Monday, April 16, 2012இலங்கை::காணி பிரச்சினை தொடர்பான பரிந்துரைகள் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கையில் காணிப் பிரச்சினைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் காணி பிணக்குகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment