Monday, April 16, 2012

உள்நாட்டு பாதுகாப்பு மிகப்பெரிய சவா‌ல் - மன்மோகன் சிங்!:-உள்நாட்டுப் பாதுகாப்புக்கான முதல்வர்கள் மாநாடு தொடங்கியது- ஜெ. பங்கேற்பு!

Monday, April 16, 2012
புதுடெல்லி::உ‌ள்நா‌ட்டு பாதுகா‌ப்பு ‌மிக‌ப்பெ‌ரிய சவாலாக மா‌றி வரு‌கிறது'' எ‌ன்று பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கூ‌றினா‌ர்.

டெ‌‌ல்‌லி‌யி‌ல் முத‌ல்வ‌ர்க‌ள் மாநா‌ட்டை தொட‌‌‌ங்‌கி வை‌த்து அவ‌‌ர் பேசுகை‌யி‌ல், வட ‌கிழ‌க்கு மா‌நில‌ங்க‌ளி‌ல் பாதுகா‌ப்பு ‌நிலைமை தொட‌‌ர்‌ந்து கவலை அ‌ளி‌‌க்‌கிறது எ‌ன்றா‌ர்.

உ‌ள்நா‌ட்டு பாதுகா‌ப்‌பி‌ல் ம‌த்‌திய அரசுட‌ன் இணை‌ந்து மா‌நில அரசுக‌ள் செயலா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்ட ‌பிரதம‌ர், தற்போதைய மாநாடு பாதுகா‌ப்பை வலு‌ப்படு‌த்த உத‌விகரமாக இரு‌க்கு‌ம் எ‌ன்றா‌ர்.

ம‌த்‌திய அரசு நடவடி‌க்கையா‌ல் கா‌ஷ்‌மீ‌ரி‌ல் த‌ற்போது அமை‌தி ‌நிலவு‌கிறது எ‌ன்று‌‌‌ம் கட‌ந்த ஆ‌ண்டு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட பாதுகா‌ப்பு நடவடி‌க்கைக‌ள் ‌திரு‌ப்‌திகரமாக உ‌ள்ளது எ‌ன்று‌ம் ‌பிரதம‌ர் கூ‌றினா‌ர்.

இடதுசா‌ரிக‌ள் ‌தீ‌விரவாத அமை‌‌ப்புகளு‌‌ம் நா‌ட்டி‌ற்கு பெரு‌ம் அ‌ச்சுறு‌த்ததாக உ‌ள்ளது எ‌ன்று கூ‌றிய ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ‌தீ‌விரவாத செய‌ல்களை மு‌றிய‌டி‌ப்ப‌தி‌ல் ம‌த்‌திய அரசு தொட‌ர்‌ந்து ‌வி‌ழி‌ப்புட‌ன் உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.

உள்நாட்டு பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது எ‌ன்று‌ம் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் எ‌ன்று‌ம் ‌பிரதம‌ர் வ‌லியுறு‌த்‌தினா‌ர்...

உள்நாட்டுப் பாதுகாப்புக்கான முதல்வர்கள் மாநாடு தொடங்கியது- ஜெ. பங்கேற்பு!

உள்நாட்டுப் பாதுகாப்புக்கான முதல்வர்கள் மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று அதிகாலையில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் அத்தனை பேரும் வந்து பூங்கொடுத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

பின்னர் டெல்லி வந்து சேர்ந்த ஜெயலலித தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி அசோகன், எம்.பிக்கள் வரவேற்றனர். அதன் பின்னர் விஞ்ஞான் பவனில் தொடங்கிய மாநாட்டில் ஜெயலலிதா கலந்து கொண்டார்.

இன்றைய மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் காங்கிரஸ் அல்லாத பிற மாநிலங்களின் முதல்வர்கள் மொத்தமாக கலந்து கொண்டுள்ளனர்.

ஜெயலலிதா, நரேந்திர மோடி, நவீன் பட்நாயக், நிதீஷ் குமார் உள்ளிட்ட காங்கிரஸ் அல்லாத பிற மாநில முதல்வர்கள் தனியாகக் கூடி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் பேச்சு அடிபடுவதால் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இன்றைய கூட்டத்தில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது, மாவோயிஸ்ட் வன்முறை, போலீஸ் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாடு இல்லத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment