Saturday, April 28, 2012

ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம்!

Saturday, April, 28, 2012
இலங்கை::ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூவர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று நாளை இலங்கைக்கு விஜயம செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பிரித்தானியாவின் கிரீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜென் லெம்பார்ட், ஸ்பெய்ன் சோசலிச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜூவான் பெர்னாண்டோ லுபாஸ் மற்றும் லத்வியன் கிறிஸ்தவ டெமொகரட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இனிஸ் வெய்டரே ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம செய்ய உள்ளது.

இந்தக் குழுவினர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆpயோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவிகளின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் நிலைமைகள் குறித்தும் குறித்த பிரதிநிதிகள் குழுவினர் நேரடி மேற்பார்வை செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment