Saturday, April, 28, 2012இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தனித் தமிழ் இராச்சிய கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதாக நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிங்கள தேசியக் கூட்டமைப்பு என்னும் அமைப்பினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ போன்ற கட்சிகளின் பெயர்களிலேயே தனித் தமிழ் இராச்சிய கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கட்சிகளினால் தனித் தமிழ் இராச்சிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1995 திம்பு தீர்மானத்தின் போதும் குறித்த கட்சிகள் தனித் தமிழ் இராச்சியம் பற்றி வலியுறுத்தியிருந்தன.
தேர்தல் விஞ்ஞாபனங்களின் போது தனிநாட்டு கோரிக்கை பற்றி குறிப்பிட்டுள்ளன.
இந்தக் கட்சிகள் இலங்கையை ஓரே நாடாக ஏற்றுக் கொள்ளும் அடிப்படை அரசியல் சாசன விதியை மீறிச் செயற்பட்டுள்ளன என்று சிங்கள தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் ஜயந்த லியனகே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment