Saturday, April, 28, 2012வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் மீள் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டுக்கான முதல் காலாண்டுப் பகுதியில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கொழும்பிற்கும் - தூத்துக்குடிக்குமான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டமையும் புகலிடக் கோரிக்கையாளர் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் 408 பேர் நாடு திரும்பியுள்ளதாகவும், கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதியில் 597 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர் நாடு திரும்புவதில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு சரியான காரணங்களை குறிப்பிட முடியாத போதிலும் தூத்துக்குடி – கொழும்பு கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டமையும் ஒர் காரணமாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவர் நிறுவனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி மிச்சேல் ஸிவாக் தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டில் தன்னார்வ அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் உதவியுடன் 1728 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தின் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களே அதிகளில் நாடு திரும்பியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக மலேசியா, ஜோர்ஜியா, ஹொங்கொங் மற்றும் கரீபியன் தீவுகள் போன்ற நாடுகளிலிருந்து சில இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
No comments:
Post a Comment