Friday, April 20, 2012

வீசா பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது!:-இரு சிறுமிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

Friday, April, 20, 2012
இலங்கை::வெளிநாடுகளுக்கான வீசாக்களை பெற்றுத்தருவதாக கூறி பல வருடங்களாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொள்ளுபிடி பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை நடத்தி சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று பிற்பகல் அந்த அலுவலகத்தில் இருந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக 2003 ஆம் ஆண்டில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை 27 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பல வருடஙகளாக அவர் எவ்வாறு மறைமுகமாக இந்த தொழிலை முன்னெடுத்தார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீசா பெற்றுத்தருவதாக கூறி சந்தேக நபர் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இரு சிறுமிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

இரு சிறுமிகளை நிர்வாணப்படுத்தி அதை கையடக்க தொலைபேசியில் படமெடுத்து பின்னர் அச்சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொம்பே பகுதியில் வைத்தே இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ஆபாச வீடியோ காட்சிகள் என்பன மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

9, 10 வயதுடைய இரு சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்திய பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment