Friday, April 20, 2012

பாராளுமன்றத் தெவுக்குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ!

Friday, April, 20, 2012
இலங்கை::பாராளுமன்றத் தெவுக்குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும். இதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய சர்வக் கட்சி பாராளுமன்றக் குழுவினர் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித் துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை படிப்படியாக அமுல்படுத்தி முன்னேற்றம் காண அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை புதன்கிழமை இரவு அலரி மாளிகையில் சந்தித்து பேசியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்து கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். கூட்ட மைப்பு பாராளுமன்ற தெரிவுக் குழுவை புறக்கணித்தால் தீர்வுத்திட்டத்தை அடை வது கடினமாக அமைந்து விடும். அதே போன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் எளிமையான விடயங்களை முதலிலும் கடினமான பரிந்துரைகளை படிப்படியாகவும் அல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்புத் கருத்து வெளியிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் பாராளுமன்ற தெரிவுக் குழு விடயம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுட னும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஜ பல முக் கிய விடயங்களை வெளிப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இச்சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் கூறுகையில், தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக் குழுயோசனையை ஏற்றுக் கொண்டு அக்குழுவில் கலந்துகொள்ள வேண்டும்.இல்லையென்றால் தீர்வுத்திட்டம சிக்கலாகி விடும். இதற்கான வலியுறுத்தல்களையும் அழுத்தங்களையும் கூட்டமைப்பிற்கு இந்திய பாராளுமன்றக் குழு கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி உறுதிபட கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment